×

பேராவூரணி அருகே கழிவுநீர் குட்டைபோல் இருந்த குளத்தை தூர்வாரி படித்துறை அமைத்த இளைஞர்கள்

பேராவூரணி: பேராவூரணி அருகே பாசி படர்ந்து கழிவு நீர் குட்டைபோல் இருந்த குளத்தை இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ரூ.3.8 லட்சம் செலவில் தூர்வாரி படித்துறை அமைத்துள்ளனர். பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் தெருவில் சின்னக்குளம் உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 3 ஏக்கர் ஆகும். இந்த குளம் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்தது. மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட இதரக் கழிவு பொருட்களால் நிரம்பி தொற்று நோய்கள் பரப்பும் இடமாகவும் இருந்தது.

இந்தக் குளத்தினை தூர்வாரி சீரமைத்து தரவேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஆவணம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நன்கொடைகள் பெற்று ரூ.3.8 லட்சம் செலவில் ஆவணம் சின்னக்குளத்தை தூர்வாரி படித்துறை அமைத்துள்ளனர். மேலும் தற்போது தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் சின்னக்குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இளைஞர்களின் இந்த சிறப்பான முயற்சிக்கு  பொதுமக்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men ,Dwarvari Ghat ,Paravurani , Peravurani, sewerage, youth
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...